வெள்ளி, 13 மார்ச், 2009

ஆணுலகப் பதற்றம் - சுகுமாரன்

தேன்மொழி தாசின் 'ஒளியறியாக் காட்டுக்குள்' கவிதை நூலை இங்கேவெளியிட்டுப் பேசக் கிடைத்த இந்த வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய நீண்ட கால நண்பர் ராஜ மார்த்தாண்டன் நூலைப் பெற்றுக் கொள்கிறார் என்பது தனிப்பட்ட மகிழ்ச்சிக்குக் காரணம். இந்த மகிழ்ச்சிதரும் நிமிடங்களுக்காக காலச்சுவடு பதிப்பகத்துக்கும் கடவு அமைப்புக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.மலையாளப் பெண் கவிஞர் ஒருவருடன் எனக்கு நல்ல தோழமையுண்டு.அண்மையில் அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது ஒரு சம்பவத்தைவிவரித்தார். தமிழில் இன்று எழுதுபவர்களில் முக்கியமான பெண் கவிஞர்ஒருவர் மலையாளக் கவிஞரைத் தொடர்புகொண்டு ஓர் அறிக்கையில்கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். எழுத்தில்ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு எதிராக ஆண்கள் நடத்தும்தந்திரங்களைக் கண்டிப்பதாக அந்த அறிக்கை இருக்கும் என்றும்தெரிவித்திருக்கிறார். ஆண் கவிஞர்கள் செய்யும் தந்திரங்களையும் பட்டியலிட்டிருந்தார்.1. பெண்ணின் பெயரைப் புனைபெயராகச் சூட்டிக்கொள்ளுகிறார்கள்.2. பாலியல் உறுப்புகளைப் பற்றிய குறிப்புகளையும் அந்தரங்கமானதருணங்களையும் பற்றி பட்டவர்த்தனமாகப் பெண் பெயரில் எழுதிபெண் கவிஞர்களைப் பற்றிய கீழான சித்திரத்தை உருவாக்க முயற்சிசெய்கிறார்கள்.3.நேர்காணல்களில் பெண் கவிஞர்களைப் பற்றிய அவதூறுகளைப்அவிழ்த்து விடுகிறார்கள்.அந்தப் பட்டியலில் இருந்த புகார்களில் இந்த மூன்றுக்கும் முதன்மைகற்பிக்கப்பட்டிருந்தது. இவற்றுக்கு எதிராகத்தான் அந்த கண்டன அறிக்கை.அதில் மலையாளக் கவிஞரும் கையொப்பமிட வேண்டும் என்றுதமிழ்க் கவிஞர் கேட்டுக்கொண்டிருந்தார். மேலோட்டமான பார்வைக்குஇந்தப் புகார்கள் நியாயமாவை என்றே தோன்றின. ஆனால் அவற்றைநடைமுறைப்படுத்துவது அசாத்தியம். ஒரு கவிஞனை இன்ன புனைபெயரில்தான் எழுத வேண்டுமென்று வற்புறுத்துவது எப்படி? இன்ன விஷயத்தைத்தான் எழுதவேண்டுமென்று கட்டாயப்படுத்துவது எப்படி?ஒரு நேர்காணலில் இதைத்தான் பேச வேண்டுமென்று நிர்ப்பந்திக்க முடியுமா? இந்தக் கேள்விகள் எழுந்தபோது கண்டன அறிக்கை பற்றிய யோசனையையும் கைவிட வேண்டியதாயிற்று.இது இலக்கியப் பிரச்சனையல்ல. இலக்கியம் சார்ந்த அரசியலின் பிரச்சனை. படைப்பு ஆற்றல் ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானது. இயல்பானது. ஆனால் இதுகாறும் படைப்பு வெளியை ஆண் மையமான சிந்தனைகளே ஆக்கிரமித்திருந்த சூழலில் பெண்கள் நுழைந்து விட்டார்களே என்ற ஆணுலகப் பதற்றம்தான் இதற்குக் காரணம். இந்தசவாலான தருணத்தில் தான் தமிழில் பெண் படைப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பெண்களின் படைப்புகள் அதிக எண்ணிக்கையிலும் அதிக வீச்சுடனும் வெளியாகும்போது இதுவரை உருவாக்கப் பட்ட இலக்கிய விதிகள் கைவிடப்படநேரும். இலக்கியத்தில் ஒரு புதிய அழகும் ஆற்றலும் உருவாகும் என்று எண்ணுகிறேன்.அந்தப் புதிய அழகின், புதிய ஆற்றலின் அடையாளமாகவே தேன்மொழிதாசின் கவிதைகளைக் கருதுகிறேன்.சமீப காலமாக எனக்கு வாசிக்கக் கிடைத்த கவிதைத் தொகுப்புகளில்பெரும்பாலானவை பெண் கவிஞர்களின் தொகுப்புகளாகவே இருந்தனஎன்பது இப்போது நினைவுக்கு வருகிறது. புத்தக வெளியீடுகளில்வெளியிட்டும் அறிமுகப்படுத்தியும் பேசக் கிடைத்தவையும் பெண்களின்கவிதைகளாகவே இருந்தன. தேன்மொழியின் இந்தத் தொகுப்பு உட்பட.கவிதையைப் பாகுபடுத்துவதை மனம் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால்நடைமுறையில் அப்படி ஒரு பாகுபாடு நிலவுவதை அறிவு சுட்டிக் காட்டுகிறது. அதனால் அதை ஏற்றுக் கொண்டே வாசிப்பில் ஈடுபடவும்நேர்கிறது.இதுவரை ஆண் மையக் கருத்துக்களாலும் கற்பனைகளாலும்கட்டமைக்கப்பட்டிருந்த மொழிக்கு மாற்றாக புதிய மொழியை பெண்கள்உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த உருவாக்கத்தின் சாரத்தில் கருத்துகளும் புதிய படிமங்களும் சிந்தனைகளும் தானே உருவாகின்றன. சங்க இலக்கியப் பாடல் ஒன்றை மேற்கோளாகச் சொல்ல விரும்புகிறேன். ஈமக் கலம் செய்பவனை முன்னிருந்திச் சொல்லப்படும் கவிதையில் இறந்து போன கணவனுக்காகச் செய்யப்படும் தாழியில்தனக்கும் இடம் வேண்டும் என்று ஒரு மனைவி கேட்பதாக வருகிறது. இது ஓர் ஆண் மனைவியை அடக்கம் செய்யும் தாழியில் தனக்கும் இடம் வேண்டுமென்று கேட்பதாக எழுதப் பட்டிருக்க முடியாதா என்று குதர்க்கமாக யோசித்துப் பார்த்தேன். வாய்ப்பே இல்லை. காரணம், கவிதை சொல்லும் பெண்ணின் சொந்த அனுபவத்திலிருந்து உருவான ஒரு சித்திரம். வண்டிச் சக்கரத்தின் ஆரக் காலில் ஒட்டிக்கொண்டிருந்தபல்லிபோல என் கணவனுடன் நெடுந்தூரம் கடந்திருக்கிறேன். இந்தப் படிமத்தை ஓர் ஆண் மனம் உருவாக்கியிருக்கமுடியாது என்று தோன்றுகிறது. படிமத்தைச் சார்ந்து அந்தப் பெண்ணின்வாழ்வும் மொழியும் துலங்குகின்றன. தமிழில் பெண் கவிதையில் சாத்தியமாக வேண்டியது இந்த படைப்புச் செயல்தான் என்று கருதுகிறேன். அப்படியான செயல்பாட்டில் நம்முடைய கவிதை மேலும்செழுமையடையும். அதற்கான துடிப்பை எல்லாக் கவிஞர்களிடமும்தேடுகிறேன் - தேன்மொழி தாசின் கவிதைகளிலும் என்னுடைய தேடல்அதுவாகத் தான் இருந்தது. அந்தத் துடிப்புள்ள கணிசமான கவிதைகள்எனக்குக் கிடைத்தன என்பது நிறைவளித்தது.வாழ்வின் பெரும் துக்கத்தையும் தனிமையையும் காதலையும் மரணத்தையும் தேன்மொழியின் கவிதைகள் பேசுகின்றன. சமகாலக் கவிதைகள்எல்லாமும் இந்தப் பொருட்களைப் பேசுகின்றன.தன்னுடைய அனுபவமும்மொழியும் இழையும் தனித்துவமான குரலில் பேசுகிறார் தேன்மொழி.அப்படியான தனித்துவம் அதிகமும் தென்படுவது அவரது இந்தமூன்றாம் தொகுதியில்தான் என்று நான் கருதுகிறேன்.தனிப்பட்ட மூன்று காரணங்களுக்காக இந்தத் தொகுப்பு எனக்குமகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. என்னுடைய கவிதை மொழியைக் கட்டமைத்த சில் அடிப்படைக் கூறுகள் தேன்மொழியின் கவிதைகளிலும்தென்பட்டன.ஒன்று: இயற்கை சார்ந்த ஒரு மனநிலை. குறிப்பாக மலைப் பிரதேசத்தின்சூழல். 'நான் போகுமிடங்களில் மலைகள் காத்திருக்கின்றன அல்லதுமலைகள் காத்திருக்கும் இடங்களுக்கே நான் போகிறேன்' என்று பல ஆண்டுகளுக்கு முன்னர் உள்ளெழுச்சியுடன் எழுதிய வரிகளின் வெவ்வேறுதளங்களை இந்தத் தொகுப்பின் பல கவிதைகளில் வாசித்தேன்.தைலவாசனையுள்ள காற்றும் பனி கவிந்த நிலக்காட்சிகளும் உண்ணி பூக்கள்மலர்ந்திருக்கும் வழிகளும் என்னுடைய அந்தரங்கமான மனக் காட்சிகளைநினைவு படுத்தின என்ற நிறைவு அந்த வாசிப்பில் எனக்குக் கிடைத்தது.இயற்கையை இன்றைய கவிதைகள் மோஸ்தராகச் சித்தரிக்கும் சூழலில்தேன்மொழி அதை தனது பகுதியாகவும் தன்னை அதன் பகுதியாகவும்இயல்பாகக் கருதுகிறார் என்பது தனிப்பட்ட ரசனைக்கு ஏற்புடையதாக இருந்தது.பெண்ணியம் என்ற முழக்கமில்லாமல் பெண் நிலையிலிருந்து உணர்ந்தஅனுபங்களையே தேன்மொழியின் கவிதைகள் முன்வைக்கின்றன.அதில்பெண்ணின் நிலைக்கு ஆண் படவாக்கள்தாம் காரணம் என்ற உரத்தபுகார் இல்லாமலிருப்பது நிறைவு தந்த இரண்டாவது அம்சம்.தொகுதியின் பல கவிதைகளில் விவிலியத்தின் மொழி இழைந்து கிடப்பதுஎன்னைக் கவர்ந்த மூன்றாவது அம்சம். மனிதக் கற்பனையின் உச்சகட்டகவிதைச் சாத்தியங்களைக் கொண்ட மொழி விவிலியத்தினுடையதுஎன்பது என்னுடைய கருத்து. அதன் கசிவையாவது என்னுடையகவிதை மொழியில் கொண்டு வந்து விட வேண்டுமென்ற பேராசைஎனக்கும் உண்டு. தேன்மொழி கவிதைகளில் அதே பேராசை தொனிப்பதைக் காணும்போது ஓர் ஒற்றுமை உணர்வு ஏற்படுகிறது. அது இந்தக் கவிதைகளை நெருக்கமாக உணரச் செய்கிறது.

காலச்சுவடு பதிப்பகம் மதுரையில் 27 01.2008 அன்று நட்த்திய10 நூல்கள் வெளியீட்டு விழாவில் தேன்மொழி தாசின் 'ஒளியறியாக்காட்டுக்குள்' கவிதை நூலை வெளியிட்டு ஆற்றிய உரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக